தனிப்பட்ட முறையில் பா.ஜ.க, காங்கிரஸ் எதிரிகள்அல்ல என்று கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சச்சின்பைலட் பேசினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;

பாஜகவின் பிரதமர் பதவிவேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கருத்துமோதலில் ஈடுபடுவதாக ஊடகங்களில் செய்திகள் இடம்பெறுகின்றன. ஆனால் இது இரு தனிநபர்களுக்கு இடையேயான போட்டியல்ல.

ஐந்து ஆண்டுகள் சேவைபுரிவதற்காகவே அரசியலில் நாங்கள் போட்டிபோடுகிறோம். தனிப்பட்ட முறையில் போட்டிபோடுவது கிடையாது. பா.ஜ.க.,வும், காங்கிரஸýம் எதிரிகள் அல்ல என்றார் சச்சின்பைலட்.

Leave a Reply