பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் தம்பதிக்கு உத்தரகண்ட் முதல்வர் விஜய்பகுகுணா அளித்த ஆடம்பரவிருந்து தேவையற்றது என கூறி பா.ஜ.க மூத்த தலைவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் தீரத்சிங் ராவத் கூறியிருப்பதாவது:
பிரிட்டிஷ் இளவரசர் உத்தரகண்டிற்கு வருகை புரிந்ததற்காக நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த ஆடம்பரவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலநாள்களுக்கு முன்பு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து அந்தமாநில மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள்மீதுள்ள அனுதாபத்தின் காரணமாகவே நாங்கள் இந்த ஆடம்பரவிருந்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்தார் .

Leave a Reply