தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடைசெய்ய வேண்டும், குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளை எல்லாம் தார்ப்பாய் போட்டு மூடவேண்டும். என்று பைத்தியகாரனோ, புத்தி சுவாதினமற்றவனோ கூறவில்லை . தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் அதன் அடிபொடிகளும் தான் இவ்வாறு கூறிவருகின்றனர்.

சமீபத்தில் தனியார் செய்திநிறுவனங்கள் நடத்தி வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான கூட்டணியே பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன . அதாவது ஆளும் காங்கிரஸ் அரசின் போலி வளர்ச்சி விளம்பரங்களை ஒளிபரப்பி பல கோடி ஆதாயம் பெற்ற இந்த செய்திநிறுவனங்கள் தங்கள் கருத்து கணிப்புகளில் கடுமையாக முயன்றும் பாஜக.,வை 160 தொகுதிகளுக்கு கீழும் காட்டமுடியவில்லை. காங்கிரஸ்சை 120 தொகுதிகளுக்கு மேலும் காட்ட முடியவில்லை .

இப்படி இட்டுக்கட்டிய தங்களுக்கு சாதகமான செய்தி நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே தங்களுக்கு பாதகமாக போகும்போது உண்மை நிலவரம் 80தை தாண்டாது என்று வந்துவிட்டால் என்ன செய்வது?. வழியில்லாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில கூட்டணி கட்சிகள் (கூட்டு களவாணிகள்) ஓடிவிடுமே!, நீட்டிய திசையெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் சிபிஐ என்ற குதிரை ஓட்டத்தை நிருத்திவிடுமே! என்று பல வழிகளிலும் சிந்தித்து பயந்துதான் நடுங்குகிறது.

காங்கிரஸ்ஸின் பயம் பாஜக என்ற கட்சியுடோனோ , நரேந்திர மோடி என்ற அதன் பிரதமர் வேட்பாளருடனோ, கருத்துக்கணிப்பு என்ற பாஜக.,வுக்கு சாதகமான மக்களின் என்ன ஓட்டத்துடனோ மட்டும் நின்றுவிடவில்லை. பாஜக.,வின் சின்னம் தாமரை என்பதால் குளத்தில் இயற்கையாகவே மலர்ந்திருக்கும் தாமரைகளையும் கண்டு அஞ்சுகிறது. அதை தார்ப்பாய் போட்டு மூடவேண்டும் என்கிறது.

ஆக மொத்தத்தில் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகதான் தெரியும் என்பார்கள். அதேபோன்று காங்கிரஸ்க்கு பார்ப்பதெல்லாம் தோல்வியாகத்தான் தெரிகிறது.
மக்களிடம் தங்கள் ஊழல் கறைபடிந்த கரத்தை உயர்த்தி தங்கள் கை சின்னத்தை காட்டி ஒட்டு சேகரிக்க வேண்டுமானால் காங்கிரஸ் தயங்கலாம். ஆனால் மக்களோ ஊழல் கறை படிந்த காங்கிரஸ்க்கு எதிராக தாமரையை பாரதத்தில் மலரச்செய்ய தங்கள் கை விரலை என்றோ உயர உயர்த்திவிட்டார்கள் , தேர்தல் வரவிருக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply