பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவாலாக உள்ளார் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், பாஜக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடியை காங்கிரசால் புறக்கணித்து விட முடியாது. அரசியல் ரீதியாக, காங்கிரசுக்கு அவர் சவால்நிறைந்தவராக விளங்குகிறார் என்றும், மோடியின் பிரசாரயுத்திகளால் அவரை கவனத்தில் கொள்கிறோம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.