ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க தலைநகர் நியூயார்க் சென்றிருக்கும் பாஜக. எம்.பி.யும், நடிகருமான சத்ருகன்சின்காவிடம் மோடிக்கு அமெரிக்கா விசாவழங்காதது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சத்ருகன்சின்கா கூறியதாவது:-

உலகின் சக்திவாய்ந்த நாடு அமெரிக்கா என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எல்லாநாடுகளும் எடுக்கும் எல்லா முடிவுகளும் எப்போதுமே சரியானவை என்று எண்ணமுடியாது.

அதேபோல் மோடிக்கு விசாவழங்குவது தொடர்பான அமெரிக்கா அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர்களின் விருப்பத்துக்குட்பட்ட செயலாகும்.

நவீனதொழிநுட்பங்கள் பெருகிவிட்ட உலகத்தில் அமெரிக்காவுக்கு வராமலேயே மோடியால் இங்குள்ள மக்களிடம் பேசமுடியும். மோடி இந்தியாவின் பிரதமராகிவிட்ட பின்னர், அவர் அமெரிக்காவுக்கு வரவேண்டியதேவை ஏற்படும்போது, அமெரிக்கா அவருக்கு விசாவழங்கியே தீரவேண்டும்.

ஒருநாட்டின் பிரதமருக்கு விசாவழங்க முடியாது என்று யாரும் மறுத்துவிடமுடியாது. அமெரிக்காவுக்கு போகவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று மோடி தொடர்ந்து கூறிவருகிறார்.

ஒருவரின்கருத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் நமக்கு இல்லா விட்டாலும் மதிக்கும் பக்குவமாவது நமக்கு இருக்கவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply