லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் . இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளிவரலாம் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

லோக்சபாதேர்தலில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்த மூன்றாவது அணி எடுபடாது என்ற காரணத்தினாலும் , காங்கிரஸ்சுடன் சேர்ந்தால் தோல்வியே மிச்சம் என்பதை பல கட்சிகளும் உணர்ந்தே உள்ளன .

இந்நிலையில் தற்போது பாஜக அணியில் தெலுங்குதேசம் கட்சி இணையக்கூடும் என தெரிகிறது. தற்போது பற்றி எரியும் தெலுங்கானாவிவகாரம் முடிவுக்கு வந்த உடன் ஜனவரியில் முறையான அறிவிப்புவெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அண்மையில்தான் குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியும் சந்திரபாபுவும் ஒரேமேடையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply