சிபிஐ.யின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ. அமைப்பை சட்டப் பூர்வமானதாக மாற்ற, மத்திய அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று உதார் விட்டிருந்தார் . இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாக்‌ஷிலெக்கி கூறியதாவது:-

காங்கிரஸ் அரசு சிபிஐ. மற்றும் மத்தியபுலனாய்வு நிறுவனங்களை அரசுக்கு ஆதரவளிக்கும் போராளிகளை போல் பயன்படுத்துகிற வேலையில் பிரதமரின்பேச்சு புதுமையானதாகவும், கபட நாடகமாகவும் உள்ளது. நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கும் சவால்விடும் காங்கிரசின் இந்தமுயற்சிகளை பாஜக எதிர்க்கிறது.

சிபிஐ-யை பகடைக் காயாக பயன் படுத்தும் காங்கிரசும், மத்திய அரசும் அதற்கான தன்னாட்சியை உறுதிப் படுத்த வேண்டும். காங்கிரஸ் அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கிற வேளையில், நிலக்கரிஊழல் குறித்து சிபிஐ. விசாரணை நடத்துகிறபோது, கொள்கைகளை உருவாக்கும் பிரச்சினைகளில் சிபிஐ. ஈடுபட வேண்டாமென பிரதமர் இன்று எச்சரிக்கிறார்.

நிலக்கரித் துறையை தன் வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், ஒதுக்கீட்டின் போது முறைகேடுகள் நடந்தது குறித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார். அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். சிபிஐ-யை காங்கிரஸ் தவறாக பயன் படுத்தி அதன் அதிகாரத்தை சீர்குலைத்து விட்டது. இந்நிலையில் அதற்கான சுதந்திரத்தை கொடுக்கும்விதத்தில் சமாதானப் படுத்துகிறார்கள். சி.பி.ஐ.,யை தன்னாட்சி அமைப்பாக உருவாக்க வேண்டிய ஆலோசனைகளை பிரதமர் கொடுத்து இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply