ஊழலில் கொள்ளையடித்த கருப்புப்பணத்தை வைத்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ்கட்சி முயற்சி செய்கிறது என்று பாஜக. பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது.

பாஜக.வின் ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசுந்தராராஜே நேற்று ஜலாவர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

பின்னர், கட்சி தொண்டர்களிடையே பேசிய முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக. மூத்த தலைவருமான ஷா நவாஸ் ஹீசேன் கூறியதாவது:-

நாடெங்கும்வாழும் சிறுபான்மையின மக்கள் இன்னும் பின்தங்கியநிலையில் உள்ளதற்கு மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான ஆட்சிமுறைதான் காரணம்.

பல்வேறு ஊழல்களின் மூலம் பல்லாயிரம்கோடிகளை குவித்து வைத்துள்ள காங்கிரஸ்கட்சி, அந்த பணத்தைவைத்து மக்களை திசைதிருப்பி ஓட்டுகளைவாங்கி வெற்றிபெற்று விடலாம் என முயற்சிக்கிறது.

காங்கிரசின் திட்டத்தை வரும்தேர்தலில் நிச்சயமாக மக்கள் முறியடிப்பார்கள் என்று அவர் கூறினார்.

Leave a Reply