தமிழகத்தில் நடைபெறும் மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு எந்ததீர்வும் இதுவரை காணவில்லை. இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு மத்திய அரசின் அலட்சியபோக்கே காரணம் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் மாரியம்மன் கோவில் சீரணி கலையரங்கில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. தமிழர்களின் பிரச்சனைகளை மத்திய அரசு அலட்சிய படுத்தி வருகிறது. அவற்றிற்கு சரியான பாடம்புகட்ட மோடியின் தலைமையிலான பாஜக.வின் ஆட்சி மத்தியில் அமைக்க அனைவரும் துரிதமாக தேர்தல்பணியாற்ற வேண்டும்.

மோடி தற்போது குஜராத் மாநிலத்தை இந்தியாவிலேயே சிறந்தமாநிலமாக ஆக்கியுள்ளார். அவரிடம் இந்தியாவின் பிரதமர்பொறுப்பை ஒப்படைத்தால் நாட்டை ஊழலற்ற வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வார். ஆகவே தமிழகத்தில் 40 இடங்களையும் பாஜக.

வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று அவர் பேசினார். இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.எஸ் ராமலிங்கம் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர முன்னிலை வகித்தனர்.

Leave a Reply