பீகார்மாநிலத்தில் நக்சல் இயக்கத்திற்கு காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான ரகசியங்களை கடத்தியதாக இரண்டு சிஆர்பிஎப் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் நக்சல் இயக்கத்தைசேர்ந்த வர்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் மத்திய ரிசர்வ்படையை சேர்ந்த போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல் பீகார் மாநிலத்திலும் நக்சல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிஆர்பிஎப். படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிஆர்பிஎப் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் நக்சல்களுக்கு தெரியப்படுத்திவந்ததாகவும் அதன்படி நக்சல் இயக்கத்தினருக்கு உதவிசெய்ததாக அதிகாரிகள் சஞ்சய்குமார்யாதவ் மற்றும் பிரதீப்யாதவ் ஆகியஇரு அதிகாரிகளை இமாம்கஞ்ச்போலீஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Leave a Reply