மத்தியபிரதேசத்தில் ராகுல்காந்தியை துணிச்சலாக கடித்த கொசுக்களை வாழ்த்துகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்தமாதம், ம.பி.,யின் பந்தல் காண்ட் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, 2009ம் ஆண்டு ம.பி., மாநிலம் பந்தல்கண்ட் பகுதிகளை சுற்றிப்பார்த்த போது, 25 ஆயிரம்கொசுக்கள் தம்மை கடித்தன என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தின் பந்தல்காண்ட் பகுதியான சாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் “இளவரசர் ராகுலைகடிக்க துணிந்த பந்தல் காண்ட் கொசுக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.

கடந்த 100 ஆண்டுகளாக ராகுல்காந்தி குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர்கூட கொசுவால் கடிபடவில்லை என்பதாலேயே நான் பந்தல் காண்ட் கொசுக்களை வாழ்த்துகிறேன்.

வளர்ச்சி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நான் தேர்தலில் களமிறங்கவிரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுகிறது. வாக்கு வங்கியை அதிகரிப்பதில்மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்றார்.

Leave a Reply