கோமாரிநோயால் பசுக்கள் இறப்பது அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல என இந்துமுன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள கதிர் காம சுவாமிகளின் அதிஷ்டானத்தில் திங்கட் கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது

கோமாரி நோயினால் இந்தபகுதியில் பதினைந்தாயிரம் மாடுகளுக்குமேல் இறந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆராய்ச்சிநிறுவனம், கால்நடைபல்கலைக் கழகம், கால்நடை பராமரிப்புத் துறை என்று இத்தனை இருந்தும் அவற்றால் கால்நடைகளின் இறப்பைத் தடுக்கமுடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

இப்படி பசுக்கள் இறப்பது ஆட்சிக்கும், அரசுக்கும் நல்லதல்ல என்பதையும் மனதில்கொண்டு கால்நடைகளின் இறப்பைத் தடுக்கவேண்டும். அத்தோடு நடுநிலையாளர்களைக் கொண்டகுழு அமைக்கப்பட்டு அந்தகுழு பரிந்துரைக்கும் உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும். அதோடு நோய் பாதிப்பில்லாத இடங்களில் இருந்து மாடுகள்வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

கோயில் நகைகள் திருடுபோவதையும், கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதையும் தடுத்துநிறுத்தி எல்லாவற்றையும் மீட்கவேண்டும். சமுதாய நலன் என்றபெயரில் அரசே கையகப்படுத்தி வைத்திருக்கும் கோவில் நிலங்களை கோயில்களிடமே ஒப்படைக்கவேண்டும்" என்றார் ராம கோபாலன்.

Leave a Reply