தெலுங்கானாவுக்கு பதிலாக, ராயலதெலுங்கானா என்ற தனிமாநிலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் இன்று தெலுங்கானா முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆந்திரமாநில பா.ஜ.க ஆதரவுதெரிவித்துள்ளது. இது குறித்து ஆந்திர பா.ஜ.க தலைவர் ஜி.கிஷன்ரெட்டி, ”தெலுங்கானாவை ஆதரிப்பதாகவும், ராயலதெலுங்கானா யோசனையை எதிர்ப்பதாகவும் மந்திரிகள் குழுவிடம் நாங்கள் கடிதம்கொடுத்துள்ளோம். பல ஆண்டுகளாக மக்கள் ஒன்றாகவாழும் ராயல சீமாவை பிரிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.ஆந்திரமாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் முழு அடைப்புக்கு ஆதரவுதெரிவித்துள்ளது.

Leave a Reply