ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதை உறுதிபடுத்துவதாக மா.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ்கட்சிக்கு, இது வரை வரலாறுகாணாத படு தோல்வி கிடைத்துள்ளது. தமிழக வாழ் வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத் தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம்கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படு தோல்வி ஆறுதல் தந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 2014 மக்களவை தேர்தலில், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம் தான் மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றார்.

Leave a Reply