திருச்சியில் வரும் 26ம் தேதி பாஜக இளைஞரணி சார்பில், ‘இளம்தாமரை 2013’ மாநாடு நடைபெறுகிறது. பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் வருமான நரேந்திரமோடி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்க்கின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மோடியை ஏற்கனவே தீவரிவாதிகள் குறிவைத்துள்ளனர். அவருக்கு சிறப்புபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சிக்கு தனிவிமானத்தில் வரும் மோடி, விமான நிலையத்தில் இருந்து விழாமேடைக்கு கார் மூலம் வருகிறார். அவர் பயணம்செய்ய புல்லட் புரூப்கார் வரவழைக்கப்படுகிறது.

மேடையில் ஒருவர்மட்டும் நின்று பேசகூடிய வகையில் குண்டுதுளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. புல்லட் புரூப்கார் மற்றும் மேடை ஆகியவை டெல்லியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. வரும் 24ம் தேதி இவை திருச்சி கொண்டுவரப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாநாடு இடத்தில், வெடிகுண்டு தடுப்புபிரிவு, மோப்ப நாய்பிரிவு, உளவு துறை, மாநகர நுண்ணறிவு பிரிவு, தேசியபுலனாய்வு பிரிவு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மாநாடு நடைபெறும் மைதானத்தை நேற்று மாநகர போலீஸ்கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், துணை கமிஷனர் அபினவ் குமார், மாநகராட்சி கமிஷனர் தண்டாயுத பாணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அங்கு தொடர்ந்து பணியில் உள்ள போலீசாரிடம் தினமும் மைதானம் மற்றும் மேடை அருகே வெடிகுண்டுசோதனை நடத்தவும், சந்தேகப் படும்படியாக யாரேனும் சுற்றினால் அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீஸ்கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply