இந்தியவில் இருக்கும் விமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டு விமானிகள் வரும் 2013ம் ஆண்டிற்குள் பணியிலிருந்து வெளியேறற விமான கட்டுபாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது .

இது தொடர்பாக விமான-கட்டுப்பாட்டு இயக்குநர் பாரத்பூஷன் தெரிவிக்கையில் , 2013ம் ஆண்டிற்குள் வெளிநாட்டு விமானிகள் பணியைவிட்டு செல்ல உத்தரவிடபட்டுள்ளது. இதனால் விமான

நிறுவனங்கலுக்கு செலவு மிச்சமாகும். இந்தியாவில் வெளிநாட்டு விமானிகளுக்கு அதிகசம்பளம் தரப்படுகிறது .

தற்போதைய நிலையில் இந்தியாவில் 415வெளிநாட்டு விமானிகள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் 1300 விமானிகள் இருக்கின்றனர் .இருப்பினும் நாம் வெளிநாட்டு-விமானிகளை சார்ந்துள்ளோம். நமது விமானிககள் பலர் துணைவிமானிகளாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply