கேரளாவில் உள்ள குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ மதப்பிரிவான ஜேகோபைட் சிரியன் சர்ச்சின் தலைவரான திரு.தாமஸ் மார் டிமொதாஸ் (Thomas Mar Timotheos) அவர்கள், “கேரளாவிலுள்ள ஜேகோபைட் பிரிவினருக்கு மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை. குஜராத்திலும் எங்கள் சர்ச்சை பின்பற்றும் எங்களவர்களுக்கு மோடியால் எந்த விதமான பிரச்னையும் இல்லை. சொல்லப்போனால்

மோடியின் வளர்ச்சிப்பணிகளை புகழவே செய்கிறார்கள்.” என்றார். பாஜகவின் தேசிய செயலாளர் திரு.P.K.கிரிஷ்ணதாசை சந்தித்த பின்னர் இதை தெரிவித்தார்.

திரு.P.K.கிரிஷ்ணதாஸ், ‘தி டெலிக்ராப்’ நிருபருக்கு கூறியது: “நானும் பாஜக மாவட்ட பிரதிநிதிகளும், கோட்டயத்திலுள்ள தலைமை சர்ச்சில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். நிகழ்ச்சி முடிந்த்தும் சர்ச்சின் தலைவரான திரு.தாமஸ் மார் டிமொதாஸ் அவர்களுடன் உரையாடினோம். உரையாடலுக்கு இடையில் அவர் கூறியது: தற்போது தேசம் மிகவும் கடினமான பாதையை கடந்துகொண்டிருக்கிறது. இக்கணத்தில் தேவையானது, ஸ்திரமான அரசும், வலிமையான ஊழலற்ற தலைவரும்தான் என்றார்.

ஒரு வாரம் முன்னர்தான் கேரள மலவங்கரா ஆர்தொடாக்ஸ் சிரியன் சர்ச்சின் தலைவர் திரு.பசிலியோஸ் மர்தோமா பௌலோஸ் II (Catholicos Baselios MarThoma Poulose II) அவர்கள், மோடியின் வளர்சித்திட்டங்களை பாராட்டியிருந்தார். பாஜகவின் மோடி பிரதமராவதை தன வரவேற்பதாகவும், மோடி மதங்களை சகிப்புத்தன்மையுடன் அனுகுவதாகவும் புகழ்ந்திருந்தார்.

“அவர் (மோடி) சகிப்புத்தன்மையற்றவர் என பொதுப்பார்வை உள்ளது. ஆனால் எனக்கு இதில் நேரடி அனுபவம் இல்லை” என்றார் அந்த மதத்தலைவர். “குஜராத்திலுள்ள எங்கள் சமூகத்தினர் கூறுகிறார்கள், மோடி எங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுகூலமகவே உள்ளார். மேலும் சிவப்பு நாடாத்தனத்தில் சிக்காமல் வர்த்தம் சிறப்பாக நடக்கவும் உதவுகிறார் என்று”.

Leave a Reply