பிரதமர்பதவி வகிப்பதற்கு குடும்ப பாரம்பரியம் மட்டுமே ராகுல்காந்திக்கு தகுதியாக உள்ளது என பாஜக.வின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல்காந்தியின் சான்றுகளை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.குடும்ப பாரம்பரியத்தைத்தவிர, அந்த உயர்வான சான்றுகள் எவை என்று அவர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பிரதமர் மன்மோகன்சிங் தனது ஓய்வை அறிவிக்கவே தேவையில்லை. ஏற்கெனவே, வரும்மக்களவை தேர்தலுடன் காங்கிரசுக்கு ஓய்வுகொடுக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

இதற்கான செய்தியை கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அழுத்தமாகவும், தெளிவாகவும் தெரிவித்து விட்டது. மோடி பிரதமரானால் நாடு அழிந்துபோகும் என்று மன்மோகன் கூறியுள்ளார். ஆம்! நரேந்திர மோடி காங்கிரஸை அழிக்கப்போகிறார். ஊழல் நிறைந்த அரசின் மிகவும் திறமையற்ற, பலவீனமான மற்றும் மென்மையானபோக்கை கடைபிடிப்பவர், அனைத்து வகையிலும் இந்தியாவை இருண்டபாதைக்கு இட்டுச்சென்றவர் என்று மன்மோகன்சிங் மதிப்பிடப்பட்டு வருகிறார்.

நாட்டில் வளர்ச்சி விகிதக்குறைவு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் வேளாண்மை, உற்பத்தி ஆகியவற்றில் பின்னடைவு, அண்டை நாடுகளிடம் பகைஉணர்வு ஆகியவற்றுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்றார் வெங்கையா நாயுடு.

Leave a Reply