ஆர்எஸ்எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ஹைதராபாத் புறநகர்ப்பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்எஸ்எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகவத் உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசிநாள் கூட்டத்தில் மட்டும் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

Leave a Reply