ஆம் ஆத்மி கட்சி கேஜ்ரிவால் வி ஐ பி கலாச்சாரத்தை வெறுத்து ஒதுக்கும் எளிமையின் அடையாளமாக ஊடகங்கள் காட்டி கொண்டு இருக்கையில் அவருக்கு முனோடியாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பரிகர் இருந்து கொண்டு இருகின்றார்…

பரிக்கரும் கேஜ்ரிவாலை போல ஐ ஐ டி யில் படித்து பட்டம் பெற்றவர்தான் ..இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து முதல்வர்களிலும் அதிகம் படித்தவர் இவர் தான் – இந்தியாவின் தலை சிறந்த, ஒவ்வொரு இந்திய மாணவனின் கனவு கல்லூரியான IIT யி‌ல் பொறியாளர் கல்வி கற்ற முதல் முதல்வர், இவர் தற்போது இந்தியாவில் அரிதாக காணப்படும் ஒழுக்கமான அரசியல் தலைவர்களில் ஒருவர்.

மேலும் பெரும்பாலும் இவர் தான் கோவா அரசு தலைமை அலுவலகத்தில் இருந்து தனது அன்றைய அலுவலக பணியை முடித்து விட்டு போகும் கடைசி ஆளாக இருப்பார் என்று அங்கு உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர், இதற்க்கு காரணம் தன்னிடம் வரும் அரசு கோப்புகளை அன்றய தினமே ஆராய்ந்து செயல் படுத்துபவர், முதல்வர் அலுவலகத்தின் அனைத்து கோப்புகளை பற்றிய நிலையை தனது விரல் நுனியில் வைத்து இருப்பாராம்,

மேலும் பாரிக்கர் தான் சுவாமி விவேகானந்தர் மற்றும் தீன் தயால் உப்பாதியா வகுத்த பாதை படி நடப்பவர் என்று தன் எளிமை மற்றும் நேர்மைக்கான காரணமாக கூறுகிறார்.

தனக்கு சொந்தமான மாருதி காரை தானே ஒட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்..சிகப்பு சுழல் விளக்குகளை தடை செய்து உள்ளார்… முதல்வர் என்ற முறையில் அரசு இல்லத்தில் குடியேறாமல் தன சொந்த இல்லத்தில் வாழ்கிறார்.. கோவா நகரின் சின்னஞ்சிறு டீ கடை கடைகளில் பரிகர் டீ சாப்பிடுவது அங்கு பெரிய செய்தி அல்ல..

Leave a Reply