சர்தார் வல்லபாய்படேல் இந்தியாவை இணைத்தவர். ஒரேநாடாக மாற்றியவர். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் கிர் காட்டுக்குப்போய் சிங்கத்தைப் பார்க்க பாகிஸ்தானுக்குத்தான் நாம் போயிருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அகமத்நகரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மோடி மேலும் பேசியதாவது , நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் படேல். அவர் நாட்டை இணைத்தவர். அவர்வழியில் எனது கட்சிசெயல்படும்.

அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நாட்டின் பலபகுதிகளுக்கு போக விசாவாங்க வேண்டியிருக்கும். ஏன் கிர்சிங்கங்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் படேலுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மாகாந்தியை நினைவு கூறும் அதேநேரத்தில் படேலையும் நாம் நிச்சயம் நினைவு கூறவேண்டும். படேல் காங்கிரஸ்காரர் என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். அவர் மாபெரும் இந்தியர். இந்நாட்டுக்காக உழைத்தவர், சேவையாற்றியவர். அவர் அத்தனை இந்தியர்களுக்கும் பொதுவானவர் என்றார் மோடி.

Leave a Reply