1984 ஆம் ஆண்டு முனனாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலரால் சுட்டு கொல்லப் பட்டதையடுத்து நிகழந்த கலவரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தில்லி துணைநிலை ஆளுர் நஜீப்ஜங்கை சந்தித்த பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன், கலவரம் குறித்து சிறப்பு புலானாய்வுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை பஞ்சாபை ஆளும் அகாலிதளம் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply