பாம்பனில் பா.ஜ.க., சார்பில் நாளை கடல்தாமரை போராட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க மீனவரணி தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது:–

கச்சத் தீவை மீட்க கோரியும், இந்தியா–இலங்கை இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன் பிடிக்கவும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், மத்திய அரசின் மீன்வளத் துறைக்கு தனிமந்திரி நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (வெள்ளிக் கிழமை) மதியம் 2 மணி அளவில் பாம்பனில் கடல்தாமரை போராட்டம் நடைபெற உள்ளது .

எனது தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன், உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். போராட்டத்திற்கு முன்னதாக மீனவ அமைப்புகளின் முக்கியபிரதிநிதிகளை சுஷ்மா சுவராஜ் சந்தித்துபேசுகிறார் என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply