குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு என் கவுன்டர் வழக்கில் தொடர்பில்லை என தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டில் இஸ்ரத் ஜஹான் உள்பட 4பேர் சுட்டு கொல்லப்பட்டனர் . இவர்கள் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதற்காக கொல்லப்பட்டனர் என மாநில போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் இது போலி என்கவுன்டர் என மோடியின் மீது பலிப்போட சதி திட்டம் தீட்டப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ., விசாரித்து வருகிறது.

இந்தவழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டை புனைந்தது . இதுகுறித்தும் போலீஸ்குழு விசாரித்தது. விசாரணையில் இன்று 2 வது குற்றச்சாட்டு பதியப்பட்டது. இதில் ஐஏஎஸ். ( உளவுத் துறை ) அதிகாரிகள் ராஜேந்திர குமார் , பி. மிட்டல், சின்கா, ராஜிவ்வான்கடே ஆகியோர் முக்கிய குற்றவாளியாக சேர்க்ப்பட்டுள்ளனர். அமீத்ஷாவின் பெயர் இதில் இடம் பெறவில்லை. இது நீதிக்குகிடைத்த வெற்றி என பாஜக.,வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply