காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிபிஐ. அமைப்பை சாதுர்யத்துடன் தனக்குசாதகமாக பயன்படுத்தி வருகிறது. சிபிஐ. அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. காங்கிரஸ் கட்சி சிபிஐ.யை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தவறாக பயன்படுத்துகிறது.

முன்பு நாட்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தபோதும் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஏராளமான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடைகள், பேருந்து நிறுத்தங்களில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவுசெய்தார்கள். அதன் காரணமாகத் தான் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட்டது.

தங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பவர்களைத் தான் சிபிஐ. இயக்குனராக நியமிக்கிறார்கள். பதவிக் காலம் முடிந்தபிறகு வேறு ஏதாவது பதவிகள் அளிப்பதாகவும் அவர்களுக்கு உறுதி அளிக்கிறார்கள். அதை எதிர்பார்த்து அந்தபதவிக்கு வருபவர்களும் நடந்து கொள்கிறார்கள் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply