இந்து முன்னணியின் சார்பில் 'சமுதாய சமர்ப்பண தின அனுசரிப்பு' நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் நிறைய ஊழல்கள் நடக்கின்றன. இதை அரசு கண் காணித்து அந்த துறையின் வரவு, செலவு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். இந்து முன்னணி ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தலில் எந்தகட்சிக்கு ஆதரவு என்பதை இது வரை முடிவு செய்யவில்லை. தேர்தல்நேரத்தில் ஆதரவை முடிவுசெய்வோம். நரேந்திர மோடி நல்லவர், நேர்மையானவர் என்பது என் கருத்து. மதவாதம் என்பது மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல்கட்சிகள் நடத்தும் நாடகம். இவ்வாறு ராம கோபாலன் தெரிவித்தார்.

Leave a Reply