டெல்லி மாநில பாஜக தலைவர் விஜய் கோயல் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பதிலாக ஹர்ஷ வர்தனை பாஜக தலைமை புதன்கிழமை நியமித்துள்ளது.

டெல்லியில் ஐந்தாவது முறை எம்எல்ஏவான ஹர்ஷ வர்தன், டெல்லி சட்ட சபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் விஜய் கோயல் தற்போது நடந்த மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து எம்பி,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி, வரவிருக்கும் நாடாளுமன்றதேர்தலை பாஜக, ஹர்ஷ வர்தன் தலைமையில் சந்திக்கும். டெல்லியிலும் நிலவும் ஜனாதிபதி ஆட்சிக்குபின் ஒருவேளை மறுதேர்தல் அறிவித்தால், அதையும் ஹர்ஷ வர்தன் தலைமையில் சந்திக்கவேண்டி, பா.ஜ.க இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிகிறது.

Leave a Reply