குஜராத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மோடி அவர்கள் அந்த மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றுள்ளார். மது விற்பனையால் கிடைக்கும் வருமானம் மாநிலத்துக்குத் தேவை என்று மோடி சொல்லவில்லை. ஓட்டுக்காக இலவசங்களை அளித்து விட்டு, அதை ஈடு கட்ட ஏழைக் குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைகளை குஜராத் அரசு திறந்து விடவில்லை.

குட்கா ( புகையிலைப் பாக்கு) கூட குஜராத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.
இது ஏழைக் குடும்பங்களில் அமைதியை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் இந்த நடவடிக்கைகள் லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் நன்றியை அவருக்குப் பெற்றுத்தந்துள்ளது.

போதையின் விளைவால் நடக்கும் குற்றங்களும் குஜராத்தில் இல்லை.

இதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் அரசே மதுக் கடைகளை  நடத்துகிறது.லட்சக்கணக்கான குடும்பங்கள் இதனால் அழிகின்றன.

தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை இந்த மதுக் கடைகளில் தொலைக்கிறார்கள் .
அவர்கள் மது அருந்திவிட்டு வரும் வழியில் கூட்டாளிகளுடனோ மற்றவர்களுடனோ சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். இது சில சமயங்களில் கொலைகளில் கூட முடிகிறது.

அவர்கள் வீடு வந்து சேர்ந்தால் மனைவியுடன் சண்டையில் ஈடுபடுகின்றனர்; குழந்தைகளை அடிக்கின்றனர்.

உழைத்துச் சம்பாதித்த அவர்களது சம்பளம் வீட்டுத் தேவைகளுக்கோ , மருந்து வாங்குவதற்கோ, குழந்தைகளின் படிப்பிற்கோ பயன் படாமல் வீணாகின்றது.

ஆகவே தமிழ் நாட்டின் எழைக் குடும்பங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அவர்கள் மோடிக்கும், பா ஜ க வுக்குமே வாக்களிக்க வேண்டும்

முதலில் தமிழ் நாட்டு மக்கள் நாடாளு மன்றத் தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்கட்டும்;
அடுத்து சட்ட சபைத் தேர்தலிலும் தாமரைக்கே வாக்களிக்கட்டும்.

பின்பு ஏழைக் குடும்பங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் படும்.

நன்றி ; ஸ்ரீதரன்

Leave a Reply