நரேந்திரமோடி மீது பெண்வேடமிட்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

நரேந்திரமோடி பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் நாடெங்கும் தீவிரத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், அவருக்கு முதல்தர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இதனால் தீவிரவாதிகள் மோடிமீது தாக்குதல் நடத்த முடியாத சூழலில் உள்ளனர் என்றும், எனவே கர்ப்பிணிப்பெண் வேடமிட்டு மோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என்றும், மத்தியபுலனாய்வுப் பிரிவினருக்கு ரகசியத்தகவல் கிடைத்து உள்ளது.

எனவே, நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என்றும் புலனாய்வுப்பிரிவு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி பீகார்மாநிலம் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்டு உரையாற்றிய போது, அவர் வருவதற்குள் மைதானத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply