தொகுதிபங்கீடு குறித்து, லோக்ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானின் வீட்டுக்கு சென்று, பாஜக. மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

லோக்ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுகூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மக்களவைத்தேர்தலில் பாஜக. வுடன் கூட்டணி சேரப் போவதாக முறைப்படி அறிவித்தார். இந்நிலையில், பீகாரில் தொகுதிபங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக பாஜக. மூத்த தலைவர்கள் ராஜிவ்பிரதாப் ரூடி, ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஷா நவாஸ் ஹூசைன் ஆகியோர், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குசென்றனர்.

அவர்களை பஸ்வானின் மகன் சிராக்பஸ்வான் வரவேற்றார். இந்த சந்திப்புக்குபின்னர் பாஜக.வின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை தனியாக பஸ்வான் சந்தித்துபேசினார். இதேபோல், நரேந்திர மோடியையும் அவர் விரைவில் சந்தித்து பேச உள்ளார்.

Leave a Reply