இன்று தமிழகத்தில் பல ஊர்களில் ஓடிசா , யு பி, ஜார்கண்ட் முதலிய மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் குழாய் வேலை, மின்சாரம் தொடர்பான வேலைகள் செய்வதற்காக மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றனர்,

நேபாளத்திலிருந்து வந்தவர்கள் சிற்றுண்டி சாலைகள் மற்றும் செக்யூரிட்டி கார்டுளாகப் பணி புரிகின்றனர்.

இலவசங்களும், டாஸ்மாக் சாராயமும் தமிழ் இளைஞர்களின் உழைப்பதற்கான ஆர்வத்தையும், தொழிலில் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேறும் எண்ணத்தையும் அழித்து விட்டன. .இதனால் அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்களும் அழிந்து விட்டன.

உழைக்காமல், மது அருந்திக் கொண்டு, சீட்டு விளையாடிக் கொண்டு , சுய மரியாதை இன்றி வாழும் ஒருவனுடன் எந்தப் பெண்ணும் குடும்பம் நடத்த மாட்டாள் . உறவினர்கள் அவனது குடும்பத்தையே ஏளனமாக எண்ணுவர் . இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பல குடும்பங்களில் இப்படி நடக்கும் போது அது சமூகப் பிரச்னையாக மாறுகிறது.

மேலும் இதனால் குழந்தைகள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டு எதிர்கால எதிர்கால சந்ததியும் வீணாகிறது.

திமுக ,அதிமுக இரண்டும் ஓரு தலைமுறைத் தமிழ்க் குடும்பங்களையே அழித்து விட்டன. ஆகவே ஏழைத் தமிழ்க் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் ஒரு மாற்றாக மக்கள் பா ஜ கவுக்கும் தாமரைக்கும் வாக்களிக்க வேண்டும் .

நன்றி ஸ்ரீதரன்

Tags:

Leave a Reply