பா.ஜ.க., முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமண் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

1962-ல் ரயில்வே துறையில் கணக்காளராக பணியாற்றிய அவர் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் நுழைந்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தேசியஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரயில்வே இணை அமைச்சராக பதவிவகித்தார் பங்காரு லட்சுமண்.

பங்காரு லட்சுமண், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பா.ஜ.க,வின் 5 ந்தாவது தேசிய தலைவராக இருந்தார்

Leave a Reply