சலயா, ஜாம்நகர், குஜராத்: சலேம் மொஹம்மத் பகாத்துடைய பயோடேட்டா அரசியலில் உள்ள ஒழுக்கமின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 45 வயதான அவர் வாழ்க்கையின் பல கட்டங்களில், தன் சொந்த நகரமான சலயாவில் கார்ப்ரேஷன் அங்கத்தினராக, காங்கிரஸ், சமாதா போன்ற கட்சிகளுக்கு பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.

ஆனால் பாஜகவுடன் சேர்ந்ததுதான் அவருக்கு மிகுந்த பலன்களை அளித்தது. 13, பிப்ரவரி, 2013 அன்று பகாத்தும் மற்ற 26 இளைஞர்களும் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர்.

90% முஸ்லீம் மக்களை கொண்ட அந்த கார்ப்பரேஷனை முதன்முறையாக பாஜக கைப்பற்றியது. "உண்மையில் பாஜகவில் சேர்ந்தது என்னுடைய கடினமான முடிவுதான் என்கிறார் பகாத். "ஆனால் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருந்தேன். எனக்கு தெரியும் திரு.மோதியுடன் கை கோர்த்தால், ஆதாயங்களும் வளர்ச்சியும் கிடைக்கும் என்று"

2010ல், பகாத்தும் நான்கு முஸ்லிம்களும் பாஜகவில் சேர்ந்து முனிசிபல் தேர்தல்களில் வென்றனர். உடனே சலயாவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. பகாத்தும் மற்ற முஸ்லீம்களை சம்மதிக்கவைத்து பாஜகவில் சேர்த்துவிட்டார்.

டிசம்பரில் நான்காம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நரேந்திர மோதி, 2002 கலவரத்தில் ஏற்பட்ட கரையை துடைத்து வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்தினார். அவரை தீவிரமாக எதிர்ப்போர் கலவரத்திற்கு அவரே காரணம் என்கின்றனர்; இன்னும் சிலர் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்; ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. பாகாத்தை போன்றவர்களுக்கு, பாஜகவுடன் இணைந்து செயல்படுவது குறித்த சந்தேகம் விலகிவிட்டது,.

33,000கும் மேல் மக்கள்தொகை கொண்ட அந்த சிறு துறைமுக நகரம், பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, கடத்தல் தொழிலுக்கு பெயர் பெற்றது. தீவிரவாத எதிர்ப்புப்படையை தவிர சலயாவை யாரும் திரும்பிப்பார்த்தது கிடையாது. சாலைகள், மின்சாரம், குடிநீர் எல்லாவற்றுக்கும் பற்றாக்குறைதான். இப்போதோ சிமண்ட் சாலைகள், தடையற்ற மின்சாரம், தெரு விளக்குகள் எல்லாமே வியப்பைத்தருகிறது.

"திரு.நரேந்திர மோதி எங்களுக்கு அரசுப்பெட்டகத்தை திறந்து விட்டதைப்போலத்தான் இது. வளர்ச்சிக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வந்து கொட்டும். இதுவரையும் நின்றதில்லை" என்கிறார் பகாத்.

டிசம்பர் தேர்தலில் 182 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில்கூட முஸ்லீம்களை திரு.மோதி நிறுத்தவில்லை. இதுவே அவர் மதசார்புடையவர் என்பதற்கு ஆதாரம் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.

'நாங்கள் வேட்பாளர்களின் தகுதியை பார்த்துத்தான் கவனமாக தேர்ந்தெடுக்கிறோம், மதரீதியில் அல்ல' என்று கூறும் பாஜக, சலயாவை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது.

நன்றி: NDTV 13, பிப்ரவரி, 2013​

Leave a Reply