தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர் நலனில் பொறுப்புடன் செயல்பட்டுவருவதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.

முஷாபர்பூர் நகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், நரேந்திர மோடியுடன் ஒரேமேடையில் ராம்விலாஸ் பாஸ்வானும் கலந்துகொண்டு பேசியது:

“குஜராத்தில் 2002-க்கு பிறகு எந்த வகுப்புக்கலவரமும் நடைபெறவில்லை. ஆனால், பீகாரில் மாதம் தோறும் கலவரம் நடக்கிறது. இந்தியா விதவிதமான பூக்களைக்கொண்ட பூங்கா என்றால், அதைப் பாதுகாக்கும் முனைப்புகாட்டும் தோட்டக்காரர் இவர் (மோடி).

நாட்டில் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர்நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறீர்கள் . நீங்கள் (மோடி) முள்முடி சூடப்போகிறீர்கள்.

சாதி, மதம், இன வேறுபாடுகளை மறந்து விடுவோம். இன்றைய இளைஞர்களுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம் தான் தேவை. அதைக்கொடுக்க வல்லவர் நம் எதிர்காலப் பிரதமர் மோடி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நரேந்திரமோடி, அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர். நாட்டின் வீசும் மோடி அலையால் மத்தியில் அவரது தலைமையில் ஆட்சி அமைவதுநிச்சயம். அவரது ஓராண்டு ஆட்சிக்குப் பின்னர் மோடியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்றார் பாஸ்வான்.

Tags:

Leave a Reply