பாராளுமன்ற தேர்தலில் ராஜ்தாக்கரேவின் மாகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி போட்டியிடாது என தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர்களில் ஒருவரான நிதின்கட்கரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தேர்தலில் தங்கள்கட்சி போட்டியிடாது என ராஜ்தாக்கரே வரம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சி போட்டியிட்டால் பாஜக- சிவசேனா கூட்டணிக்கு பாதிப்பு உருவாகும் என கூறப்பட்டுவந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதிய உணவருந்திய இருதலைவர்களும் காங்கிரஸ் எதிரான வாக்குகள் பிரிவதால் அக்கட்சி லாபம் ஏற்படும்சூழல் உருவாகக் கூடாது என முடிவெடுத்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, ராஜ்தாக்கரேவிடம் தேர்தலை விட்டுவிலகி இருங்கள் அல்லது எங்கள் வேட்பாளருக்கு உதவுங்கள் என்றும் ஒருவேளை போட்டியிடும் எண்ணம் இருந்தால் குறைவான தொகுதிகளில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

Leave a Reply