ஜார்க்கண்டிற்கு சிறப்பு அந்தஸ்துகோரி வரும் மார்ச் 7ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் பொருளாதார முற்றுகைக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தினேஷ் ஆனந்த் கோஸ்வாமி கூறியதாவது:-

இந்தகோரிக்கையை முதன் முதலாக பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்மந்திரி அர்ஜூன் முண்டா கடந்த 2011ல் டெல்லியில் நடந்த தேசியவளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்தார். அதன்பிறகு இந்த கோரிக்கை திட்டகுழுவிடம் கொண்டு செல்லப்பட்டது.

நீண்ட நாட்களாக நாங்கள் வைத்துவரும் இந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வில்லை. நாங்கள் இந்த முற்றுகையில் சரக்குரயில்கள் உட்பட தாதுப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply