வரும் லோக்சபாதேர்தலில் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வெற்றி பெற்றால் அவருடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை காரணம்காட்டி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசாவழங்க அமெரிக்கா மறுத்து வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்கா துணை வெளியுறவு செயலாளர் நிஷாபிஸ் வால், வரும் தேர்தலில் மோடி வெற்றிபெற்று பிரதமர் ஆனால் அவருடன் இணைந்து வர்த்தக உறவு வைத்துகொள்ள தயார் என தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த தலைவரையும் வரவேற்க அமெரிக்கா தயாராகஉள்ளது. இந்திய துணைத்தூதர் கைதுவிவகாரத்தால் இருநாட்டு உறவில் ஏற்பட்ட விரிசலை மேம்படுத்த புதுடெல்லி வந்ததாகவும் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply