எனது சொந்த செலவில் உங்களை குஜராத் மாநிலத்துக்கு அனுபிவைக்கிறேன்..மோடிக்கு இருக்கும் சிறுபான்மை மக்களின் ஆதரவை நேரில் பார்த்து விட்டு வாருங்கள் .. குஜராத்தில் ஜாம் நகர் சலாய முனிசிபாலிட்டியில் மொத்த மக்கள் தொகையில் 90 சதவிதம் பேர் முஸ்லிம்கள் .. அந்த முனிசிபாலிட்டியில் உள்ள 27 வார்டுகளை பிஜேபி கைபற்றியது .. அதில் 24 பேர் முஸ்லிம் கவுன்சிலர்கள் ..

அதே போல ராஜஸ்தான் மாநிலதில் பொதுப்பணி துறை அமைச்சர் யூனுஸ் கான்.. முந்தைய பிஜேபி ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் ..இதெல்லாம் இஸ்லாமியரிடையே மறைக்கப்பட்டு வேறு மாதரியான பிரச்சாரங்கள் செய்யபடுகின்றன..

சென்னை வண்டலூரில் பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பிஜேபி மாநாட்டில் மோடியுடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது..அபோது மோடியிடம் சில கேள்விகள் முன் வைத்தேன் ..

அதற்க்கு மோடி அவர்கள் ஏன் இரண்டு கைகளையும் பற்றியபடி " உங்கள் சமுதாயத்தின் எதிர்கால நன்மைகள் நலன்கள் என்னால் பாதுகாக்கபடும்..உங்களின் தனித்துவமான நன்னம்பிக்கை பரிபூரணமாக காப்பாற்றப்படும் .குஜராத்திதிற்கு வாருங்கள் .. இஸ்லாமியர்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய அரசை நீங்கள் நேரில் பார்க்கலாம் " என்று கூறினார்..

அபோது அவர் கண்களை மிக அருகில் பார்த்தேன்.அந்த கண்கள் எனக்கு அவர் தந்த உறுதிமொழியை சத்தியமென்று மௌன மொழியில் பிரகடனம் செய்தது…

அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர்
என்.கே.என்.சதக்கத்துல்லா

Leave a Reply