கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு, வரும் புதன் கிழமைக்குள் இறுதி செய்யப்பட்டு விடும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி செல்லும்வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத்தெரிவித்தார்.

தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் , தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேறு கட்சிகள் ஏதும் கூட்டணிக்கு வரவிரும்பினால் வரவேற்போம் என்றும் கூறினார்.

Leave a Reply