ஆதார் மிகப் பெரிய மோசடி திட்டம் , மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் அந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும் என பாஜக செய்திதொடர்பாளர் மீனாட்சிலெக்கி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செய்திதொடர்பாளர் மீனாட்சி லெக்கி இது குறித்து மேலும் கூறியதாவது:

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வகைசெய்யும் ஆபத்தான திட்டம் ஆதார் அடையாள அட்டைதிட்டம். பாஜக ஆட்சிக்குவந்தால் ஆதார்மோசடி குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும். சுப்ரீம்கோர்ட் உத்தரவுகளையும் ஆதார் திட்டம் மீறியுள்ளது. இந்ததிட்டத்தின் வாயிலாக திரட்டப்பட்ட இந்தியமக்களை பற்றிய தகவல்கள் வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

இது மிக ஆபத்தானது. வங்கதேசத்திலிருந்து 3 கோடிக்கும் அதிகமானமக்கள் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆதார்திட்டத்துக்கு நாடாளுமன்ற நிலை குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 31பேர் இந்த திட்டத்தை எதிர்த்துவாக்களித்தனர். இருப்பினும் இந்ததிட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்தது. ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை குறித்து சுப்ரீம்கோர்ட்டும் கேள்வி எழுப்பியுள்ளது. ஆதார் திட்டத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று மீனாட்சி லெக்கி கூறினார்.

Leave a Reply