அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தாலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் யின் ஷாகாவில் கலந்து கொண்டாலோ அவர்கள் அரசு உத்தியோகங்களிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இராம் சங்கர் ரகுவன்ஷி என்ற நகராட்சி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங்குகொண்டதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தன்னை உத்தியோகத்திலிருந்து நீக்கம் செய்தது தவறு என்று கூறி அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் சட்ட விரோதமாக செயல்படுகிற இயக்கம் என்றோ அல்லது நாட்டை கவிழ்க சதி வேலைகளில் ஈடுபடுகின்ற இயக்கம் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமும் இல்லை. அப்படிபட்ட சூழ்நிலையில் அந்த இயக்கத்தில யார்வேண்டுமானாலும் பங்கு எடுத்துக்கொள்ளலாம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படை உரிமைகளில் ஒன்று கருத்து சுதந்திரமும் தனக்கு விருப்பட்ட கொள்கையை பின்பற்றுவதுமாகும். இந்திய குடிமகனாகிய ஒருவர் தனக்கு பிடித்த இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் அதன் செயலபாடுகளில் ஈடுபடலாம் அதற்காக அவரை வேலையிலிருந்து நீக்குவது அடிப்படை உரிமை மீறலாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே இராம் சங்கர் ரகுவன்ஷிக்கு அவருடைய வேலையை அவருக்கு திரும்ப தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்டிருக்கிறது. 1948 ஆம் வருடம் காந்திய கொலையான பிறகு, 1975 – 1977 ஆம் ஆண்டுகள் வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பொழுது, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடுக்கப்பட்ட பிறகு. எந்த முகாந்தரமும் இல்லாமல் வெரும் அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதால் வெகு சில ஆண்டுகளிலேயே அந்த தடை அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது.

Leave a Reply