குஜராத் கலவரம் தொடர்பான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கருத்திற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ராகுல் காந்தி மதிப்பளிக்க வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட சிறப்பு புலனாய்வு அறிக்கையில் குறைபாடு இருப்பதாக ராகுல்கூறுவது அதிர்ச்சி தருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பணவீக்கம், ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பதில் தராமல் இதுபோன்ற விஷயங்களால் மக்களை திசைதிருப்ப ராகுல்காந்தி முயல்வதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் ரவி சங்கர்பிரசாத் விமர்சித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று பேட்டியளித்த ராகுல்காந்தி, குஜராத்கலவரம் தொடர்பாக மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அதற்கான ஆதாரங்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதற்குபொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ராகுல், சிறப்பு புலனாய்வு அறிக்கையில் குறை பாடுகள் இருப்பதாகவும் விமர்சித்தார்.

Leave a Reply