வரும் மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு நடிகர் பவன்கல்யாண் ஆதரவு தந்தால் வரவேற்போம் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது;

மாநிலபிரிவினை விஷயத்தில் பா.ஜ.க.,வின் . மீது எந்த தவறும் இல்லை. பாஜக.வை விமர்சிக்கும் தகுதி எந்த கட்சிக்கும் இல்லை. தெலங்கானா அமையவேண்டும் என்பதில் பாஜக.வுக்கு மாற்றுகருத்து கிடையாது. ஆனால் மாநிலம் பிரிக்கப்பட்ட முறை தான் வெட்கக் கேடாக உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கும்கட்சி பாஜக. மோடி பிரதமர் ஆவதை எந்தசக்தியாலும் தடுக்கமுடியாது. மோடியுடன் கேஜ்ரிவால் மட்டுமல்ல, யார்வேண்டுமானாலும் போட்டியிடலாம். மத்தியில் பாஜக. ஆட்சி அமைந்த உடன், சீமாந்திராவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply