உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் நாடாளுமன்றதொகுதி காங்கிரஸ் எம்பி. சத்பால் மஹராஜ், பாஜக.,வில் இணைந்தார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர், கடந்தாண்டு உத்தராகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, காங்கிரஸ் அரசு உடனடியாக செயல்பட வில்லை , நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல நரேந்திரமோடியால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

சத்பால் மஹராஜின் வருகை பாஜக.,வை பலப்படுத்தும் என்று குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், அவரது வருகை மோடியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையும், காங்கிரஸ்கட்சி மீது நம்பிக்கை இழந்திருப்பதையும் காட்டுவதாக தெரிவித்தார்.

சத்பால் மஹராஜூக்கு 10 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது . 10 எம்.எல்.ஏ-க்களும் அணிமாறினால், உத்தரகாண்ட்மாநில காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து உருவாகியுள்ளது .

Leave a Reply