நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாதது, காங்கிரஸ்கட்சி தோல்வி பயத்தால் உறுதியற்று இருப்பதையே காட்டுவதாக நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், “மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற 10 வருடகாலத்தில் ஏழு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது காங்கிரசியின் தோல்விபயத்தையே காட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு ப.சிதம்பரத்தின் நிதிக் கொள்கைகளே காரணம். ஒளிர்ந்து கொண்டிருந்த இந்தியாவை நிதியமைச்சர் சிதம்பரம் அஸ்தமனமாக்கி விட்டார்.

பொருளாதார மேதை மன்மோகன்சிங், மான்டெக்சிங் அலுவாலியா மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரின் கொள்கைகள் தான் இந்திய பொருளாதாரத்தை திணறவைத்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க அமைத்துள்ள கூட்டணியை பார்த்த மற்ற கட்சித்தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை நாட்டில் கொண்டு வரும்” என்றார் நிர்மலா சீதாராமன்.

Tags:

Leave a Reply