விரும்பிய கூட்டணி அமைந்ததால், திருப்பதிகோவிலில் பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மொட்டை அடித்து முடிகாணிக்கை செலுத்தினார்.

தமிழகத்தில், விரும்பிய கூட்டணியை தற்போது பாஜக. அறிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சாமிதரிசனம் செய்தார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;

தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்காக திருப்பதிசென்று ஏழு மலையானை தரிசித்து வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் ஒருமாற்றத்தை ஏற்படுத்துவோம்.நாளை முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply