மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்..
.
சென்னையில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது; வரும் மக்களவை தேர்தலில் பாஜக 300

தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். ஜஸ்வந்த்சிங், அத்வானி உள்பட மூத்த தலைவர்கள் யாரையும் பா.ஜ.க புறக்கணிக்கவில்லை. மூத்த தலைவர்கள் அனைவருக்குமே பா.ஜ.க உரிய மரியாதையை அளித்துவருகிறது.

கூட்டணி கட்சிகளின் கொள்கைகளை பா.ஜ.க அப்படியே ஏற்றுக் கொள்ளாது. கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் செயல்படுவோம். இந்தியளவில் மோடிக்கும் பாஜக.,வுக்கும் செல்வாக்கு பெருகிவருகிறது. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து நாட்டைசீரழித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றவேண்டும் என்ற உணர்வும் மக்களிடையே பெருகிவருகிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்.

யாருடைய ஆதரவையும் கேட்கமாட்டோம். ஆதரவு அளித்தால் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்கள் முழுவதுமே பாஜக.,வுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இங்கும் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம்.

பிஜேபி ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்கள்பிரச்சனை, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆகியவற்றுக்கு உரிய தீர்வுகாண்போம்.இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட 13 அம்சதிட்டத்தை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் அரசோ அல்லது அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.,வோ முயற்சி செய்யவில்லை.

பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஐக்கிய இந்தியா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.ராஜ்நாத்சிங்கை மு.க.அழகிரி சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று கூறினார்.

Leave a Reply