நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி, அ.தி.மு.க இடையேதான் போட்டி இருக்கும் என பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேசநலனுக்காகவும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காகவும் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சிறப்புயாகத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மூன்றில் இரண்டுபங்குக்கு மேல் வெற்றிபெறுவது உறுதி. கடந்த சிலவாரங்களாக நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் 60 சதவீதம் பேர் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் எனவும், நரேந்திர மோடி பிரதமராக விருப்பம் தெரிவித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டது. காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு உதாரணமாக உள்ளது.

எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி, அ.தி.மு.க இடையேதான் போட்டி இருக்கும். மற்றகட்சிகள் மூன்றாம் இடத்துக்கே போட்டியிடுகின்றன என்றார்.

Leave a Reply