பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக தாம் முன்நிற்க மாட்டேன் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் ராஜ்நாத்சிங் போட்டியிடுகிறார். மேலும் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ராஜ்நாத்சிங் தம்மை பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிறுத்தி கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டன . இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், நரேந்திர மோடிதான் பிரதமர்வேட்பாளர் என்பது கட்சி மேற்கொண்ட ஒருமித்த முடிவு.

அவரை முன்னிறுத்தி தான் பாஜக வாக்கு சேகரித்து வருகிறது. இதனால் நான் ஒருபிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கே இடமில்லை. ராஸ்தானின் பார்மர் தொகுதியில் சீட் கொடுக்கப் படாததால் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரை கட்சியிலிருந்து நீக்கும் நிலைக்கு அவர் என்னை தள்ளிவிட மாட்டார் என கருதுகிறேன் என்றார்.

Tags:

Leave a Reply