வேலூர், தஞ்சாவூர் மக்களவை தொகுதிகளுக்கு பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.,வின் 7-ஆவது வேட்பாளர்பட்டியல் திங்கள் கிழமை (மார்ச் 31) இரவு வெளியிடப்பட்டது. வேலூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தஞ்சாவூர் தொகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, இந்திய ஜனநாயகக்கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள்கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 20-ஆம் தேதி சென்னையில் பாஜக தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply